தமிழக பள்ளிகளில் 4362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் - விரைவில் போட்டித் தேர்வு

Posted By:

சென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழக பள்ளிகளில் 4362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் - விரைவில் போட்டித் தேர்வு

அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 6 ஆகும்.

பத்தாம் வகுப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், உயர் கல்வித் தகுதிச் சான்றிதவ், பணி முன் அனுபவ சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களின் அசல், நகல்களை எடுத்துச்செல்ல வேண்டும்.

இந்தப் பணி நியமனம் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் நடைபெறுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களிலிருந்து 1:5 என்ற விகிதத்தில் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பர்.

நேர்முகத் தேர்வு மொத்தம் 25 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

English summary
4326 lab technician posts going to recruited in government and government aided schools.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia