ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted By:

சென்னை : ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு 31, மே 2015ம் ஆண்டு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வினை சுமார் 8 லட்சம் பேர் எழுதுதினார்கள். இதில் ஒரு காலிஇடத்திற்கு 5 பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முடிவுகள் இன்று ge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 4362 ஆய்வக உதவியாளர் பணிகளை நிரப்ப 31 மே 2015ம் தேதி தேர்வு நடைபெற்றது. கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்குப்பின் ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதால் தேர்வு எழுதியவர்கள் பரபரப்பாக முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பல நாட்களாக ரிசல்ட் எப்ப வரும் என்று தேர்வு எழுதியவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்த மாதம் 31ம் தேதிக்குள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்விற்காக முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரியில் சென்றுப் பார்க்கலாம்.

dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in என்ற இணையதள முகவரியில் சென்றுப் பார்க்கலாம்.

English summary
Lab Assistant written exam was held on 31 may 2015. Lab Assistant result released today.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia