ஆய்வக உதவியாளர் பணி.. மாவட்ட வாரி சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் பட்டியல் வெளியீடு

Posted By:

சென்னை : தமிழ் நாடு முழுவதும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு 31 மைங்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும். கடிதம் பெறுபவர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு செல்ல வேண்டும்.

அவரவர் மாவட்டத்தில் உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்குச் செல்ல வேண்டும். அதில் விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விபரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்ககப்படும்.

ஆய்வக உதவியாளர் பணி.. மாவட்ட வாரி சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் பட்டியல் வெளியீடு

சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் விபரங்கள் 01.04.2017ம் ஆண்டு மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு அழைப்பாணைக் கடிதமும் அனுப்பப்படும்.

சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு செல்ல வேண்டிய மையங்களின் முகவரி மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. கோயம்புத்தூர் மாவட்டம் - கோ.து.வ.ச அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, இராஜவீதி, கோயம்புத்தூர் - 641001.

2. கடலூர் - புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கடலூர்.

3. தருமபுரி - அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, இலக்கியம் பட்டி, தருமபுரி.

4. திண்டுக்கல் - புனித லூர்தன்னை மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்.

5. ஈரோடு - அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பன்னீர் செல்வம் பார்க் அருகில், ஈரோடு - 638001.

6. காஞ்சிபுரம் - எஸ்.எஸ்.கே.வி (மகளிர்) மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.

7. கன்னியாகுமரி - எல்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில்.

8. கரூர் - சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. வெண்ணெய்மலை. கரூர்.

9. கிருஷ்ணகிரி. - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கூட்டரங்கம், கிருஷ்ணகிரி.

10. மதுரை - ஓ.சி.பி.எம் (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி, மதுரை - 625002.

11. நாகப்பட்டினம் - இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரில், நாகப்பட்டினம் - 611003.

12. நாமக்கல் - அரசு மேல்நிலைப்பள்ளி நாமக்கல் (தெற்கு) மோகனூர் ரோடு, நாமக்கல் - 637001.

13. பெரம்பலூர் - தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, துறையூர் ரோடு, பெரம்பலூர்.

14. புதுக்கோட்டை - ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை - 622001.

15. இராமநாதபுரம் - சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம்.

16. சேலம் - புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரிசிபாளையம், சேலம் - 636009.

17. சிவகங்கை - செயிண்ட் ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை.

18. தஞ்சாவூர் - தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, மேரிஸ் கார்னர். தஞ்சாவூர்.

19. நீலகிரி - புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உதகமண்டலம் . 643001.

20. தேனி - நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி - 625531.

21. திருவண்ணாமலை - காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் மெயின் ரோடு, சோ.கீழ்நாச்சிப்பட்டு, திருவண்ணாமலை - 606611.

22. திருவாரூர் - ஸ்ரீ.ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.

23. திருவள்ளூர் . டி.ஆர்.பி.சி.சி.சி இந்து மேல்நிலைப்பள்ளி, மோதிலால் தெரு, திருவள்ளூர் - 602001.

24. திருப்பூர் - ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இரயில் நிலையம் அருகில், திருப்பூர் - 641601.

25. திருச்சி - பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம், திருச்சி - 620002.

26. திருநெல்வேலி - சாராதக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627002.

27. தூத்துக்குடி - விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.

28. வேலூர் - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி, வேலூர்.

29. விழுப்புரம் - தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு பாண்டி ரோடு, விழுப்புரம்.

30. விருதுநகர் - சத்ரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்.

31. அரியலூர் - நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி மெயின் ரோடு, அரியலூர். ஆகிய 31 இடங்களில் ஆய்வ உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்க்கப்படும்.

English summary
School Education Department has announced 4362 Lab Assistant Certificate Verification Centre List in Government Schools at Chennai, Thiruvallur, Thiruvannamali, Thiruppur and Ramanathapuram.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia