ஆய்வக உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் வெளியீடு

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் 24.03.2017ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

சென்னை : ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5 விகிதாச்சராப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் 01.04.2017 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும். கடிதம் பெறுபவர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தங்கள் மாவட்டத்தில் உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்குச் செல்ல வேண்டும். அதில் விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விபரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்ககப்படும்.

ஆய்வக உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் வெளியீடு

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 09.04.2017, 10.04.2017 மற்றும் 11.04.2017
ஆகிய தேதிகளில் அழைப்பாணைக் கடிதம் பெற்றவர்கள் தங்கள் மாவட்டத்திலுள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்குச் செல்ல வேண்டும்.

சான்றிதழ் சாரிப்பார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவண்ஙகளின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நாளிற்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்திற்கொள்ளப்பட மாட்டாது.

சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு பின் தகுதி பெற்ற பணிநாடுனர்களைக் கொண்டு
அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் போது பெற்ற மதிப்பெண் ஆகிய இரண்டும் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் ஒன்று தயார் செய்யப்படும்.

மெரிட் லிஸ்ட் அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி மற்றும் இதர உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர் தெரிவு செய்யப்படுவார்கள்.

தெரிவு செய்யப்படுபவர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும்.

தெரிவு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
4362 Lab Assistant Posts in Government Schools at Chennai, Thiruvallur, Thiruvannamali, Thiruppur and Ramanathapuram School Education Department, Government of Tamil Nadu, INDIA
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X