குவேம்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் காலி!

Posted By:

சென்னை: குவேம்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைனில் மார்ச் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

குவேம்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் காலி!

பேராசிரியர் பணியிடம் ஒன்றும், உதவி பேராசிரியர் பணியிடங்கள் 5-ம், ஜூனியர் கம்ப்யூட்டர் புரோகிராமர் பணியிடங்கள் 2-ம் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலமாகவும், தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் இணைத்து the Registrar, Kuvempu University, Jnana Sahyadri, Shankaraghatta - 577 451 Shimoga District, Karnataka State என்ற முகவரிக்கு மார்ச் 5-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு குவேம்பு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.kuvempu.ac.in -ல் தொடர்புகொள்ளலாம்.

குவேம்பு பல்கலைக்கழகம் கர்நாடகம் மாநிலம் ஷிமோகா நகரில் 230 ஏக்கரில் பரந்து விரிந்து அமைந்துள்ளது. 1987-ல் இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவால் 1994-ல் அங்கீகாரம் செய்யப்பட்டதாகும் இது.

English summary
Kuvempu University invited application for Professor, Assistant Professor, and Junior Computer Programmers Engineer - Trainee posts. The eligible candidates can apply online through the prescribed format on or before 05 March 2016. Kuvempu University Vacancy Details 1. Professor: 01 post2. Assistant Professor: 05 posts, 3. Junior Computer Programmers: 02 posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia