கர்நாடக காவல்துறையில் தயாராகவுள்ள 1,638 கான்ஸ்டபிள் பணியிடங்கள்!!

Posted By:

சென்னை; கர்நாடக மாநில காவல்துறையில் 1,638 கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாகவுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

மொத்தம் 1,638 பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஆண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் கர்நாடக மாநில ஆயுதப்படைப் பிரிவுக்கு அனுப்பப்படுவார்கள். கல்வித் தகுதி: எஸ்எஸ்எல்சி(சிபிஎஸ்இ), எஸ்எஸ்எல்சி(ஐசிஎஸ்இ), எஸ்எஸ்எல்சி(எஸ்எஸ்சி), எஸ்எஸ்எல்சி(மாநில கல்வி வாரியம்), எஸ்எஸ்எல்சி(இணையான படிப்பு).

கர்நாடக காவல்துறையில் தயாராகவுள்ள 1,638 கான்ஸ்டபிள் பணியிடங்கள்!!

வயதுத் தகுதி: 18 முதல் 27-க்கு மிகாமல் இருக்கவேண்டும். பழங்குடியினர் பிரிவுக்கு 18 முதல் 30 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, சிஏடி-01, 2ஏ, 2பி, 3ஏ, 3பி பிரிவினர் 18 முதல் 27 வயது வரை இருக்கலாம். பொதுப் பிரிவினருக்கு வயதுச் சலுகை 18 முதல் 27 வரை மட்டுமே. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பிப்ரவரி 5-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு http://www.ksp.gov.in/pcw/policeit-overview.php என்ற முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Karnataka State Police (KSP) invited applications for 1638 Armed Police Constable (Men) Post. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 05 February 2016. The Karnataka State Police is the law enforcement agency for the Indian state of Karnataka. The force is headed by the Director General of Police.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia