2000-க்குப் முன் பிறந்த பெரும்பாலான இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் நிறைந்த ஸ்மார்ட் போன், டேப் டாப் எல்லாம் 20 வயதைக் கடந்த பிறகே அறியவும், பயன்படுத்தவும் முடிந்தது. ஆனால், 2000-க்குப் பிறகு பிறந்த தற்போதைய வளர்ச்சியடைந்த குழந்தைகள் அப்படியா உள்ளனர் ? குறிப்பாக, பள்ளியிலேயே ஸ்மார்ட் போனில் தேர்வெழுதுவது சற்று வியப்பாகத்தான் உள்ளது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கிவரும் விஞ்ஞான் பிரசார நிறுவனம், விபா நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி உள்ளிட்டவை இணைந்து தேசிய அறிவியல் விழிப்புணர்வு தேர்வை நடத்தி வருகின்றன.
நாடு முழுவதும் நடைபெற்ற இந்தத் தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கஞ்சனூர் அரசுப்பள்ளி தேர்வு மையத்தில், அந்த பள்ளி மாணவர்கள் உட்பட மூன்று தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதினர்.
அதேப் பள்ளியை சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும், 25 மாணவர்கள் முதன் முறையாக ஸ்மார்ட் போன் மூலம் தேர்வெழுதியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே கஞ்சனூர் அரசுப் பள்ளி மாணவர்கள், முதன்முறையாக ஸ்மார்ட் போன் மூலம் தேர்வெழுதியுள்ளனர். இதில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் பரிசு வழங்கப்பட உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications

