உங்களுக்கு கொல்கத்தா துறைமுகத்தில் வேலை செய்ய ஆசையா இருக்கா?

Posted By:

சென்னை: கொல்கத்தா துறைமுகத்தில் (கேபிடி) மரைன் என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறும் வாக் இன் இன்டர்வியூவில் நேரடியாக பங்கேற்கலாம்.

உங்களுக்கு கொல்கத்தா துறைமுகத்தில் வேலை செய்ய ஆசையா இருக்கா?

கிளாஸ் 3 பிரிவில் மரைன் என்ஜினீயர் பணியிடங்கள் -5 காலியாகவுள்ளன.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மரைன் என்ஜினீயர் கிளாஸ் 3 உரிமத்தைப் பெற்றிருக்கவேண்டும். இந்த உரிமத்தை மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரலிடமிருந்து பெற்றிருக்கவேண்டும்.

வயது 25 அல்லது அதற்கு மேல் இருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிடபிள்யூடி, பெண்களுக்கு வயதுச் சலுகை உண்டு.

விருப்பமுள்ள நபர்கள் Kolkata Port Trust Guest House,93, Chowringhee Road, Kolkata-700 020 என்ற முகவரியில் பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறும் வாக்-இன் இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.

English summary
Kolkata Port Trust (KPT) invited applications for the post of Marine Engineer officer Class III (NCV-2nd Engineer). The eligible candidates can apply to the post and walk in interview on 06 February 2016. Kolkata Port Trust (KPT) Vacancy Details Name of the Post: Marine Engineer officer Class III (NCV-2nd Engineer) Number of Posts: 05 Eligibility Criteria Educational Qualification: Candidates must have obtained marine Engineer Officer Class III (NCV-2nd Engineer) License from Director General of Shipping, Ministry of Shipping and Government of India Age Limit: 25 years or above.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia