இளநிலைப் பொறியாளர்களுக்கு கொங்கண் ரயில்வேயில் பணி காத்திருக்கு!

Posted By:

சென்னை: இளநிலைப் பொறியாளர்களுக்கான பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது கொங்கண் ரயில்வே கார்ப்பரேஷன் நிறுவனம் (KRCL ).

கொங்கண் ரயில்வே நிறுவனத்தில் காலியாகவுள்ள இளநிலைப் பொறியாளர் பணியிடங்களுக்காக நல்ல ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம். காலியாகவுள்ள 18 இளநிலைப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கொங்கண் ரயில்வே வரவேற்றுள்ளது.

இளநிலைப் பொறியாளர்களுக்கு கொங்கண் ரயில்வேயில் பணி காத்திருக்கு!

மொத்தம் 18 பணியிடங்கள் காலியாகவுள்ளன. தேர்வு செய்யப்படும் நபர்கள் மும்பையில்தான் பணியாற்றவேண்டும். பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி சிவில் முடித்திருத்தல் அவசியம்.

01.07.2015 தேதியின் படி விண்ணப்பம் செய்பவர்கள் வயது 18 - 35க்குள் இருத்தல் நலம்.

ஊதியமாக மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://konkanrailway.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி தேவையான சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை

To the office at Belapur Bhavan, Plot No. 6, Sec-11, CBD Belapur, Navi Mumbai - 400614 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

வரும் ஜூலை 14-ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://konkanrailway.com/english/wp-content/uploads/2015/06/Notification_JE_Civil1.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு காணலாம்.

English summary
Konkan Railway has invites applications from engineers to work in Mumbai city. Interesting persons can see the detail in the following link http://konkanrailway.com/english/wp-content/uploads/2015/06/Notification_JE_Civil1.pdf

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia