குட்டிக் குழந்தைகளுக்கும் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் “அறிவுப்பக்கங்கள்”!

Posted By:

சென்னை: குழந்தைகளுக்கு பல்வேறு வகையான கணித விளையாட்டுக்கள், விடுகதைகள் என்று குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கான பல்வேறு தளங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

கணிதம் தொடர்பான பல்வேறு விடுகதைகள் மற்றும் கணிதப் புதிர்களுக்கு:

http://www.mathplayground.com/

ஆங்கிலம் கற்க:

ஒவ்வொரு பாடத்திற்கும் புதிர் போட்டி நடத்தி, உங்கள் ஆங்கில அறிவின் நிலை என்ன என்று எளிதாக தெரிந்து கொள்ள உதவும் தளம். பாடத்தை கெட்டிங் ஸ்டார்ட் என்ற பொத்தானை கிளிக் செய்து தொடங்கவும். தோன்றும் திரையில் எப்படி குழந்தைகள் எளிதாக ஆங்கிலம் கற்கலாம் என்ற வழிமுறையை காட்டப்படும்.

இத்தளம் சொல்லிக் கொடுப்பதை எப்படி எளிதாக புரிந்து கொள்ளலாம் என்பதை பற்றியும் விளக்கம் கொடுக்கப்படும். இத்தளத்தைப் பயன்படுத்த பதிவு செய்து கொள்ளவேண்டும்.

பதிவு இலவசம்தான். 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் ஆங்கிலம் கற்றுத் தரப்படுகிறது.ஒவ்வொரு பாடமும் நாம் கற்ற பின் உடனடியாக அதன் அருகில் இருக்கும் டேக் எ குயூஸ் என்பதைக் கிளிக் செய்து நாம் கற்றுக் கொண்டதை சோதித்துப் பார்க்கலாம். இத்தளம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

தளத்தின் முகவரி: http://www.readingbear.org/

தமிழ் இணையதளங்கள்

குழந்தைகளுக்கு பயனளிக்கும் இணையதளங்கள் பலவும் ஆங்கில மொழியிலேயே உள்ளன. தமிழில் மிகக் குறைவான இணையதளங்களே உள்ளன.

கிட்ஸ்ஜோன் தமிழ்:

http://kidsone.in/tamil/

இந்தத் தளம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இயங்குகிறது. இம்மூன்று மொழிகளையும் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் வகையில் எளிமையான பட விளக்கங்களுடன் முழுக்க முழுக்க இளம் பருவக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கும்படியாகவே இணையதளத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.குழந்தைகள் கவரும் வகையில் வண்ணக் கலவைகளில் இத்தளம் மிளிர்கிறது.

 

குழந்தைகள் நூலகம்

http://kids.noolagam.com/

இதுவும் தமிழைப் பயிற்றுவிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தளம்தான். இத்தளத்தில் எழுத்துக்கள், எண்கள், கோட்டோவியத்திற்கு வண்ணம் தீட்டுதல், காட்சி அட்டை எனப்படும் வண்ணங்களை பிரித்தரிய உதவும் படங்கள், மழலைப் பாடல்கள், அச்சிட்டு பயிற்சி செய்வதற்கான பக்கங்கள் எனப் பல பாடத் திட்டங்களைக் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப நிலைத் தமிழ்ப் படிக்க இத்தளம் உதவுகிறது.

 

இலக்கியம் பயில ஒரு பக்கம்:

http://www.mazhalaigal.com

இத்தளத்தில் தமிழ் இலக்கியம், விடுகதைகள், பழமொழிகள், புதிர்கள், தமிழ் சான்றோர்கள் பற்றிய குறிப்புகள், இயற்பியல், கணிதம், பொது அறிவு ஆகிய பகுதிகள் இதில் உள்ளன.

இந்த இணையதளம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமானது என்று கூறப்படுகிறது. ஆனால், தளம் இன்னும் முழுமை பெறாமல் பல இணைப்புகள் வேலை செய்யாமல் இருக்கிறது. பக்க வடிவமைப்பும் சிறப்பாக இல்லை. மேற்கூறப்பட்ட சில பகுதிகள் மட்டும் பயன்படுத்த உகந்ததாக உள்ளது.

 

English summary
Various sites available for the kids in online. It's very useful for mind and knowledge.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia