ரக்பியிலும் சாதிக்கும் கேஐஎஸ்எஸ் பல்கலை. மாணவர்கள்

Posted By:

சென்னை: ரக்பி விளையாட்டிலும் சாதித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்திலுள்ள கேஐஎஸ்எஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்.

இந்தியாவிலுள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்வது கேஐஎஸ்எஸ் பல்கலை எனப்படும் கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் பழங்குடி மாணவர்களுக்காக தொடக்கக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்டஙகளை வகுத்தவர் பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் அச்சுதா சமந்தா.

ரக்பியிலும் சாதிக்கும் கேஐஎஸ்எஸ் பல்கலை. மாணவர்கள்

இந்த பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியுடன் விளையாட்டிலும் பெருமளவில் சாதித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

குறிப்பாக ரக்பி விளையாட்டில் இந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 13 வயதுக்குள்ப்டடோர் அணி சாதித்து வருகிறது. இந்த அணி லண்டனில் நடைபெறவுள்ள டூராய்ட் 13 வயது்க்குள்பட்டோர் சர்வதேச சிறுவர் ரக்பி போட்டிக்காக லண்டன் சென்றுள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியா, லாவோஸ், கென்யா, போட்ஸ்வாா, உகாண்டா, ஸ்வாசிலாந்து, ஆப்பிரிக்கா, கொலம்பியா, இங்கிலாந்து, ஹாங்காங் அணிகள் பங்கேற்கவுள்ளன.

இந்த போட்டி செப்டம்பர் 30-ம் தேதி முதல் அ்க்டோபர் 10-ம் தேதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.

போட்டியில் பங்கேற்கும் அணிக்கு டாக்டர் அச்சுதா சமந்தா வாழ்த்துக் கூறி வழியனுப்பிவைத்துள்ளார்.

அணியினருடன் பயிற்சியாளர் ராஜ்கிஷோர் முர்மு, மேலாளர் ருத்ரகேஷ் ஜேனா உள்ளி்டடோர் சென்றுள்ளனர்.

English summary
KISS U-13 Boys Rugby team, representing India, left for London today to play in “Touraid U-13 International Boys Rugby Tournament-2015” scheduled to be held from 30th September to 10th October 2015. Ten countries include India, Laos, Kenya, Botswana, Uganda, Swaziland, Africa, Colombia, England and Hong Kong are participating in the tournament.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia