இன்டர்நெட் தொடர்பான படிப்புகள்: பிரேவா சிஸ்டத்துடன் கேஐஐடி பல்கலை ஒப்பந்தம்

Posted By:

சென்னை: இன்டர்நெட் விஷயங்கள் தொடர்பான சிறப்புப் படிப்புகளை வழங்குவது தொடர்பாக பெங்களூரிலுள்ள பிரேவா சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலுள்ளள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி(கேஐஐடி) பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

கேஐஐடி பல்கலைக்கழகம் சென்டர் ஆஃபர் எக்ஸலன்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய மையத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த மையத்தின் பல்வேறு படிப்புகளை வழங்கவுள்ளது கேஐஐடி. இதற்காகவே பெங்களூரு பிரேவா சிஸ்டத்துடன் ஒப்பந்தத்தை கேஐஐடி முடிவு செய்தது.

இன்டர்நெட் தொடர்பான படிப்புகள்: பிரேவா சிஸ்டத்துடன் கேஐஐடி பல்கலை ஒப்பந்தம்

இந்த மையம் மூலம் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்(ஐஓடி) என்ற படிப்புகளை வழங்கவிருக்கிறது கேஐஐடி. இதில் சேரும் மாணவர்களுக்கு இன்டர்நெட் உலகம் தொடர்பான திறமைகளை அதிகரிப்பது, இன்டர்நெட் விஷயங்களை புரிந்துகொண்டு சரியான கருவிகளைத் தேர்வு செய்து அதில் சிறப்புறச் செய்வது, வாகனக் கண்காணிப்பு, கருவி மதிப்பீடு, அவசரகால உதவி நிர்வாகம், மார்க்கெட் டெலிமாட்டிக்கிஸ், சீதோஷ்ண நிலை கண்காணிப்பு, வீட்டிலுள்ள பொருட்களை தொலைதூரத்திலிருந்தே இயக்கி கண்காணிப்பில் வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்த படிப்புகளில் வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ஏராளமான தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்குவதுதான் இந்த மையத்தின் நோக்கம்.

இதற்கான ஒப்பந்தத்தில்தான் கேஐஐடி, பிரேவா சிஸ்டம்ஸ் கையெழுத்திட்டுள்ளது. இத்தகவலை கேஐஐடி ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்கில் அண்ட் பிளானிங் இயக்குநர் டாக்டர் மிஹிர் ரஞ்சன் நாயக் தெரிவித்தார்.

English summary
Bhubaneswar-based KIIT becomes one of the first universities in the country to offer a path breaking course on Internet of Things (IoT). IoT is an emerging technology that will touch the lives of people in all walks of life. IoT is a means of getting intelligence from connected things to enable decision making and contextual automation. With the industries' projecting a demand for a million skilled resources in the next five years, there is dire need for training in IoT. Hence, to address the requirements of IoT adoption globally, KIIT's course will be a land mark phase. KIIT university has tied up with Preva Systems to setup Internet of Things - Center of Excellence.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia