சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய(இஸ்ரோ) தலைவர் ஏ.எஸ். கிரண்குமார், யோகா குரு டாக்டர் எச்.ஆர். நாகேந்திரா ஆகியோருக்கு ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி (கேஐஐடி) பல்கலைக்கழகம் பாராட்டு தெரிவித்து கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.
பட்டமளிப்பு விழா
புவனேஸ்வரில் அண்மையில் 11-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அச்சுதா சமந்தா
இந்த விழாவில் இவர்கள் இருவருக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கேஐஐடி பல்கலைக்கழக வேந்தரும், நிறுவனருமான டாக்டர் அச்சுதா சமந்தா கௌரவப்படுத்தியுள்ள்ளார்.
விண்வெளித்துறையில் சாதனை
விண்வெளித் துறையில் சாதனை படைத்ததற்காக இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை ஏ.எஸ். கிரண்குமாருக்கு கேஐஐடி வழங்கியுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளித் துறையில் இருந்து வருகிறார் கிரண்குமார்.
பிரதமரின் யோகா குரு
இதேபோல பிரதமர் நரேந்திர மோடியின் யோகா குருவான டாக்டர் நாகேந்திராவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அவர் எஸ்-வியாஸா பல்கலைக்கழகம் என்ற பெயரில் யோகாவை பிரபலப்படுத்தி வருகிறார். யோகா துறையில் அவர் ஆற்றி வரும் சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
பெங்களூருவாசிகள்...
இவர்கள் 2 பேருமே பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












