கேஐஐடி மேலாண்மை பள்ளியில் எம்பிஏ படிக்க விருப்பமா?

Posted By:

சென்னை: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கேஐஐடி ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட்டில் (கேஎஸ்ஓம்) எம்பிஏ படிப்பு பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

2016-ம் ஆண்டில் எம்பிஏ படிப்பு பயில்வதற்கான அறிவிப்பாகும் இது. இந்தப் படிப்பு பயில விரும்புபவர்கள் பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் அவர்கள், MGT/CMAT/CAT/MAT/XAT/GMAT/ ATMA ஆகியவற்றில் ஏதாவது ஒரு நிர்வாகப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.

கேஐஐடி மேலாண்மை பள்ளியில் எம்பிஏ படிக்க விருப்பமா?

விருப்பமுள்ள மாணவர்கள் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் பதிவு செய்யலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ 1,250 வசூலிக்கப்படும். ஆன்-லைனில் பதிவு செய்ய முடியாதவர்கள் தபாலிலும் அனுப்பகலாம். விண்ணப்பக் கட்டணத்ததை டிடி-யாக ெடுத்து அனுப்பவேண்டும். "KIIT School of Management" என்ற பெயரில் டி.டி. எடுத்து அதை புவனேஸ்வரில் மாற்றும் வகையில் அனுப்பவேண்டும். விண்ணப்பத்தின் உறையில் "Chairperson, Admissions, KIIT School of Management, Campus - 7, KIIT University, Bhubaneswar - 751024" என்று குறிப்பிடவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி அக்டோபர் 15 ஆகும். மேலும் விவரங்களுக்கு http://www.ksom.ac.in என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

English summary
KIIT School of Management (KSOM), Bhubaneshwar has invited applications for admissions into Master of Business Administration (MBA) programme for the academic session 2016. Eligibility: Candidates should have a bachelor's degree in any discipline with a minimum 50% aggregate marks or equivalent. Candidate should have cleared any of management entrance exams MGT/CMAT/CAT/MAT/XAT/GMAT/ ATMA.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia