பழங்குடியின மாணவர்களின் வளர்ச்சிக்காக செயல்படும் கலிங்கா இன்ஸ்டிடியூட்...!!!

பழங்குடியின மாணவர்களின் ஆரம்பக் கல்வி, உயர்கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது ஒடிசா மாநிலத்தில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்டிரியல் அண்ட் டெக்னலாஜி(கேஐஐடி). கூடுதல் விவரங்களுக்கு https://kiit.ac.in/ என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.

இந்தப் பல்கலைக்கழகத்தை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தோற்றுவித்து அங்கு கல்வியில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் அந்த மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அச்சுதானந்த சமந்தா. இவர்தான் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், பழங்குடியின மாணவ, மாணவிகளின் விடிவெள்ளியாகவும் வலம் வருகிறார்.

பழங்குடியின மாணவர்களின் வளர்ச்சிக்காக செயல்படும் கலிங்கா இன்ஸ்டிடியூட்...!!!

இன்று கேஐஐடி பல்கலைக்கழகத்தின் அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகள், மருத்துவம், பல் மருத்துவம், ஐடி போன்ற உயர்கல்வி என அனைத்தையும் வழங்கி வருகிறது. கலை, அறிவியல் படிப்பு முதல் மருத்துவம், பல்மருத்துவம், ஐடி, பிடி என அனைத்து தரப்பு படிப்புகளையும் அளித்து வருகிறார் சமந்தா.

ஒடிஸா மாநிலம் கட்டாக் மாநிலத்தில் சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் சமந்தா. அவர் 4 வயதாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். ஆனாலும் தாய்க்கு உதவியாக பண்ணையில் கூலி வேலை செய்தும், தங்களுக்குரிய சிறிய நிலத்தில் வேலை செய்தும் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் பட்டமேற்படிப்பும் படித்தார்.

அதன் பிறகு சிறிய அளவில் ஒரு இன்ஸ்டிடியூட்டைத் தொடங்கினார். அதற்கு கலிங்கா இன்ஸ்டிடியூட் என்று பெயரிட்டார். அதை படிப்படியாக முன்னேற்றி இன்று ஆலமரமாக அதை வளர்த்து லட்சக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக மாற்றியுள்ளார்.

இந்த இன்ஸ்டிடியூட் இன்று ஒரு கற்பக விருட்சம் போல ஏழை மாணவர்கள் தாங்க கேட்ட படிப்புகளை அள்ளித் தருவதாக அமைந்துள்ளது. குறிப்பாக ஒடிசா மாநிலம் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசிக்கும் மாநிலம். இங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது ஏழ்மையை விரட்ட ஒரே ஒரு வழி கல்விதான் என்பதை உணர்ந்தவர் சமந்தா.

அதற்காக அவர்களுக்காக ஒரு இன்ஸ்டிடியூட்டைத் தொடங்கினார். அவர்கள் மழலையர் படிப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை இலவசமாக பயில தொடங்கப்பட்ட இன்ஸ்டிடியூட்தான் அது. இங்கு கல்வி, உணவு, உடை, தங்க இடம் அனைத்தும் இலவசம்.

பழங்குடியின மாணவர்களின் வளர்ச்சிக்காக செயல்படும் கலிங்கா இன்ஸ்டிடியூட்...!!!

இங்கு மாணவ, மாணவிகள் சேர்த்துவிட்டால் மட்டுமே போதும். அவர்கள் படித்து பட்டதாரியாக்கி அவர்களை வெளியே கொண்டு வருவதுதான் இவர்களுக்கு டாக்டர் அச்சுதா சமந்தாவின் பணியாக உள்ளது.
தற்போது கலிங்கா பல்கலைக்கழகத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட பழங்குடியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மருத்துவ, பல் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியைப் பயின்று வருகின்றனர்.

மேலும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மாணவர்கள் பள்ளிப் படிப்பை பயின்று வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி (கேஐஐடி) ஏ கிரேடு அந்தஸ்தை மத்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வழங்கியுள்ளது.
ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில் 400 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது இந்த கேஐஐடி வளாகம். இதற்கு 29 கல்வி வளாகங்கள் உள்ளன.

அனைத்து இன்ஸ்டிடியூட்களையும் சேர்த்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றன.

இந்த வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து கட்டடங்கள் நவீன சர்வதேச தரத்தில் கட்டப்பட்டவை. வெளிநாடுகளில் இருப்பது போன்று கல்வி நிறுவனங்களை இங்கு அமைத்துள்ளனர். சர்வதேச தரத்தில் இங்கு கல்வி போதிக்கப்படுகிறது.

இப்போது டெல்லியிலும் கேஐஐடி கிளை தொடங்கியுள்ளார் டாக்டர் சமந்தா.

பழங்குடியின மாணவர்களின் வளர்ச்சிக்காக செயல்படும் கலிங்கா இன்ஸ்டிடியூட்...!!!
பழங்குடியின மாணவர்களின் வளர்ச்சிக்காக செயல்படும் கலிங்கா இன்ஸ்டிடியூட்...!!!

57 வயதாகும் டாக்டர் சமந்தாவின் உயரிய நோக்கம் எதுவென்றால், தங்களது மாநிலத்தில் ஏழை மக்கள் யாரும் படிக்காமல் இருக்கக்கூடாது. அப்படி யாராவது இருப்பது தெரிந்தால் அவருக்கு உடனே தனது கல்வி நிறுவனத்தில் இணைத்து அவர்களுக்கு கல்வி வழங்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு. அதை நோக்கி பயணிக்கவேண்டும் என்பதுதான் அவரது தாரக மந்திரமாக உள்ளது.

இந்தியாவில் இளம் வயதில் ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக பதவியேற்றவர் என்ற லிம்கா புத்தகச் சாதனையைப் புரிந்துள்ளார். இதுதவிர நூற்றுக்கணக்கான விருதுகள், பட்டங்களை வென்று சாதனை செய்துள்ளார்.

கேஐஐடி தற்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அந்தஸ்து பெற்றுள்ளது.

இந்த இன்ஸ்டிடியூட்களில் சேர்வதற்கு கேஐஐடிஇஇ என்ற நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இங்கு சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பும் உண்டு.
2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஒடிசாவிலுள்ள கந்தமால் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றார் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் அச்சுதா சமந்தா. இவர் பிஜு ஜனதா தளத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ளார்.

கல்வியாளர், சமூக சேவகர், கொடையாளர் என பன்முகங்களைச் சுமந்து பல கோடி மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். தொடரட்டும் அவரது கல்விச் சேவை.

நேரில் தொடர்பு கொள்ள

Kalinga Institute of Industrial Technology (KIIT), Deemed to be University,
Bhubaneswar, Odisha, India, Pin: 751024 என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

இ-மெயிலில் தொடர்புகொள்ள
Email: [email protected] , [email protected] என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசியில் +91 674 2725113 என்ற எண்ணில் அழைக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://kiit.ac.in/ என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kalinga Institute of Industrial Technology (KIIT) Deemed to be University, Bhubaneswar has been ranked sixth best in the country in the Times Higher Education World University Rankings 2024, result of which was announced recently. KIIT is among India's most sought-after universities, attracting students from all over the world to pursue professional and technical education. It has built its reputation as the most student-friendly university, anchored on the principles of Compassion and Humanity.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+