கேஐஐடி நுழைவுத் தேர்வு... விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..

Posted By:

சென்னை : ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் டெக்னாலஜியில் (கேஐஐடி) பல்வேறு பட்டப்படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாளாகும்.

இந்தியாவிலுள்ள மிக முக்கியமான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக கேஐஐடி திகழ்கிறது. இதன் நிர்வாகத் தலைவராக டாக்டர் அச்சுதா சமந்தா உள்ளார். கேஐஐடியில் சேர விருப்பமுள்ளவர்கள் நுழைவுத் தேர்வினைக் கட்டாயம் எழுத வேண்டும். கேஐஐடி நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 120 இடங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஐஐடி நுழைவுத் தேர்வு... விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..

நுழைவுத் தேர்விற்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மாணவர்கள் இலவசமாகவே நுழைவுத் தேர்வினை எழுதலாம்.

கேஐஐடி பல்கலைக்கழகம் மத்திய மனிதவள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிகர்நிலைப்பல்கலைக்கழகமாகும். பி.டெக், (நான்கு ஆண்டு படிப்பு) பி.டெக் (3 ஆண்டு படிப்பு), பி.ஆர்க், எம்.டெக், பி.டெக் பிளஸ் எம்.டெக் (இரட்டை டிகிரி) பி.டெக் பிளஸ் எம்பிஏ (இரட்டை டிகிரி) மற்றும் பி.ஹெச்.டி போன்ற படிப்புகளை கேஐஐடி பல்கலைக்கழகத்தில் சேர்ந்துப் படிக்கலாம்.

மேற்கண்ட படிப்புகளுக்கு வரும் நாளை மார்ச் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஜூலை 1996க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்திய தேசத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் 12ம் வகுப்புத் தேர்வில் 60% மார்க்குகளுடன் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே கேஐஐடி நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு தகுதியானவர்களாவார்கள்.

கேஐஐடியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு (கேஐஐடிஇஇ 2017) நடத்தப்படும். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கேஐஐடியில் சேர்ந்துப் படிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு www.kiit.ac.in என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளவும்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு மார்ச் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தி டிரைக்டர், அட்மிஷன்,
கேஐஐடி பல்கலைக்கழகம்,
கோயல் கேம்ப்பஸ்,
புவனேஸ்வர் - 751024,
ஒடிசா, இந்தியா

நுழைவுத் தேர்வு ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 23-க்குள் நடைபெறும் என கேஐஐடி தெரிவித்துள்து. மேலும் அதற்கான முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
KIITEE 2017 Engineering will be organized by the extremely deemed University i.e. Kalinga Institute of Industrial Technology (KIIT) so as to offer admissions in their offered graduate and undergraduate courses. It will be conducted in 120 centers across India.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia