யோகாவை பிரபலப்படுத்துங்கள்... கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு உத்தரவு!!

Posted By:

சென்னை: யோகா கல்வியை பிரபலப்படுத்துமாறு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் யோகா கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது. யோகா கல்வியை வழங்கும்போது என்சிஇஆர்டி பாடத் திட்டத்தை அனைத்து பள்ளிகளும் பின்பற்றவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

யோகாவை பிரபலப்படுத்துங்கள்... கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு உத்தரவு!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை யோகா படிப்புகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதைப் போலவே மொழி ஆய்வகம் ஒன்றையும் அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏற்படுத்தவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் மொழித் திறனை மேம்படுத்துவதற்காக இந்த ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது.

யோகாவைப் பிரபலப்படுத்துவதோடு அது தொடர்பான விழிப்புணர்வையும் இந்த பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும். யோகாவால் ஏற்படும் பயன்களை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

English summary
Kendriya Vidyalayas across the country have been asked to follow the NCERT syllabus on yoga education and create awareness on a "priority" basis about the benefits of yoga among the students. Earlier this year, in June, HRD Minister Smriti Irani had released course material and syllabus for yoga designed by NCERT for classes 6 to 9 and had also introduced yoga as a training module in teacher education programmes.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia