பாரக்பூர் கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியர் பணியிடங்கள் இருக்கு!

Posted By:

சென்னை: பாரக்பூரிலுள்ள கேந்திரிய வித்யாலயா (ஏஎஃப்எஸ்) பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட பணிகள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும். பி.ஜி. டீச்சர்ஸ், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் இன்ஸ்டிரக்டர், வாலிபால், கோ-கோ பயிற்சியாளர்கள், டாக்டர், நர்ஸ், கவுன்சிலர், பேச்சு ஆங்கில நிபுணர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பாரக்பூர் கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியர் பணியிடங்கள் இருக்கு!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களைத் தயார் செய்து, தகுந்த ஆவணங்களை இணைந்து பாரக்பூரிலுள்ள பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போட்டுவிடவேண்டும். இந்த பெட்டி, பால்டாவிலுள்ள விமானப்படை விமான தளத்திலும் வைக்கப்பட்டிருக்கும்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள மிக முக்கியமான பள்ளிகளில் ஒன்றுதான் இந்த பாரக்பூர் கேந்திரிய வித்யாலயா. விமானப்படைத் தள வளாகத்தில் இது இயங்கி வருகிறது.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.kvbarrackporeairforce.org/ என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் 29-ம் தேதிக்குள் வரவேண்டும். இதற்கான நேர்முகத் தேர்வு மார்ச் 30-ம் தேதி நடைபெறும்.

English summary
Kendriya Vidyalaya Barrackpore (AFS) invited application from eligible candidate for 25 PGT and other posts. Eligible and Interested candidates can send their application in the prescribed format on or before 29 February 2016. Eligible and Interested candidates can drop the application form in the Drop Box between 9:00 a.m. to 2:00 p.m. kept at Palta gate Air Force Station till 29 February 16.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia