படிப்புக்காக கர்நாடகாவுக்கு பிளைட் ஏறும் வெளிநாட்டு மாணவர்கள்!!

Posted By:

சென்னை: படிப்புகள் பயில்வதற்கு ஏற்ற இடமாக கர்நாடக மாநிலத்தை அதிக அளவில் வெளிநாட்டு மாணவர்கள் தேர்வு செய்வதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

கர்நாடகம்

அதிக அளவு வெளிநாட்டு மாணவர்கள் கர்நாடக மாநிலத்திலுள்ள நகரங்களைத் தேர்வு செய்வதாகத் தெரியவந்துள்ளது.

பெங்களூரு...

குறிப்பாக பெங்களூரு நகரில் தங்கிப் பயில மாணவர்கள் அதிகம் விரும்புவதாக தெரியவந்துள்ளது.

 

 

13 ஆயிரம் பேர்

இந்தியாவில் தற்போது 34,774 மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். இதில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் 13,241 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.

 

 

தமிழகத்தில்...

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 4,401 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.

3-வது இடம் மகாராஷ்டிரத்துக்கு...

3-வது இடமாக மகாராஷ்டிரம் உள்ளது. அங்கு 3,888 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர்.

சிஐஐ புள்ளிவிவரம்.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை, டெலாயிட் அமைப்பு ஆகியவற்றுடன் இந்த புள்ளி விவரத்தை மத்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) தயாரித்துள்ளது.

பெண்கள் அதிகம்..

வெளிநாட்டு மாணவர்களில் 45 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் 25 அரசு பல்கலைக்கழகங்கள், 11 தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், ஒரு அரசு நிகர்நிலைப் பல்கலைக்கழகம், 2 தனியார் பல்கலைக்கழகங்கள், ஒரு இன்ஸ்டிடியூட், ஒரு அரசு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் என பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.

 

 

அதிக பல்கலை.கள்...

கர்நாடகத்தில் அரசு பல்கலைக்கழகங்கள் 25 அமைந்துள்ளதால் அங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அகில இந்திய அளவில் பல்கலைக்கழங்களை ஒப்பிடும்போது 6.7 சதவீத பல்கலைக்கழங்கள் கர்நாடகத்தில் அமைந்துள்ளன.

அதிக அளவில் வேளாண் பல்கலைக்கழகங்கள், சட்டப் பல்கலைக்கழங்கள், மருத்துவப் பல்கலைக்கழங்கள் இங்குதான் அமைந்துள்ளன.

 

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்...

அதனால் இங்கு வெளிநாட்டு மாணவர்கள் அதிக அளவில் தங்கிப் பயில்கின்றனர். அடிப்படைக் கட்டமைப்பு வசதி, மாணவர்களுக்குத் தேவையான வசதிகள், அருமையான சீதோஷ்ண நிலை போன்றவற்றின் காரணமாகவும் இங்கு வெளிநாட்டு மாணவர்கள் அதிகமாக வருவதாக அந்த ஆய்வில் தெரியவந்துளள்ளது.

English summary
Bengaluru, Karnataka: According to the Annual Status of Higher Education 2015 prepared by the Confederation of Indian Industry, Karnataka is the most popular destination for foreign students in the country. India has about 34,774 foreign students, with Karnataka housing about 13,241 students followed by Tamil Nadu with 4,401 and Maharashtra with 3,888 students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia