கர்நாடக ஆசிரியர் தகுதித் தேர்வு: மறு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!!

Posted By:

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) திருத்தப்பட்ட மறுமுடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாயின.

கர்நாடகாவிலுள்ள பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணியமர்த்த ஆசிரியர் தகுதித் தேர்வு 2015-ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஏற்கெனவே வெளியான முடிவுகளில் பிரச்னைகள் இருந்ததால் தற்போது திருத்தப்பட்டு மறுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கர்நாடக ஆசிரியர் தகுதித் தேர்வு:  மறு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!!

இந்தத் தேர்வை கர்நாடக மாநில பள்ளிக் கல்வித்துறை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.

தேர்வை எழுதியோர் தங்களது முடிவுகளைக் காண http://kartet.caconline.in./ என்ற இணையதளத்தைக் காணலாம். இணையதளத்துக்குச் சென்று 'Registration/Login' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் உங்களது பதிவு எண்ணைக் கொடுத்து முடிவுகளைக் காணலாம். திரையில் தோன்று முடிவுகளைப் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு எதிர்காலங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் வெற்றி பெற்றவர்கள் கர்நாடக அரசு பள்ளிகள், மானிய உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு வரை பாடம் நடத்தத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

English summary
The teacher's eligibility test (TET) revised-results 2015 has been announced by the department of school education of Karnataka on the official website. Candidates who had appeared for the examination should visit the official website to check the revised results. How to check the results? Log on to the official website Click on 'Registration/Login' In the new window that opens click open the tab 'Revised-Results' Fill in your register number in the space provided and submit The result will appear on the screen Take a printout for future reference

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia