புதுடெல்லி: கர்நாடக மாநிலத்திலுள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எச். மகேஷப்பா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை கர்நாடக கவர்னர் வாஜுபாய் ஆர். வாலா பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக எச்.ஜி. சேகரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைவேந்தர் பணிக்காலத்தின்போது மகேஷப்பா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற முன்னாள் நீதபித கே.என். கேசவநாராயணா தலைமையில் உண்மையைக் கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.
குழு அளித்த அறிக்கையைத் தொடர்ந்து தற்போது மகேஷப்பா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பெளகாவி மாவட்டத்தில் அமைந்துள்ளது விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகம். மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளை உறுப்புக் கல்லூரிகளாகக் கொண்டுள்ளது விஸ்வேரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்.


Click it and Unblock the Notifications

