கர்நாடகாவில் 2-ம் ஆண்டு பியூசி ஆண்டுத் தேர்வுகள் தொடக்கம்!!

Posted By:

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 2-ம் ஆண்டு பியூசி ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்று முதல் தொடங்கவுள்ளன.

மார்ச் 11-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. காலை 9 மணிக்குத் தொடங்கும் தேர்வுகள் பகல் 12.15 மணி வரை நடைபெறும். முதல் தேர்வாக உயிரியல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களுக்கு நடைபெறவுள்ளன. பிற்பகலில் தேர்வுகள் இல்லை.

கர்நாடகாவில் 2-ம் ஆண்டு பியூசி ஆண்டுத் தேர்வுகள் தொடக்கம்!!

இந்தத் தேர்வை பியூ கல்வி வாரியம் நடத்துகிறது. இந்தத் தேர்வுகளில் கிடைக்கும் மதிப்பெண்களைக் கொண்டே மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ், பி.இ. உள்ளிட்ட உயர்படிப்புகளுக்குச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் உயர்படிப்புகளில் சேர கேசிஇடி, காமட்கே யுஜிஇடி, ஜேஇஇ தேர்வுகள் நடைபெறுகின்றன. கேசிஇடி தேர்வை, கர்நாடக மாநில அரசு நடத்துகிறது. காமட்கே தேர்வை, கர்நாடக மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் இணைந்து நடத்துகின்றன. ஜேஇஇ தேர்வை சிபிஎஸ்இ வாரியம் நடத்துகிறது.

பியூசி வாரியத்தின் 2-வது தேர்வு நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. வரலாறு, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

English summary
Its finally here! The battle of Pre-University Board exams is finally upon the students of Karnataka. The Karnataka II PUC 2016 Board Exams begin today, March 11, 2016. The examination begins on March 11, 2016 and will continue till March 28, 2016. The first examination today will be held between 9:00 am to 12:15 pm. The subjects are Biology and Electronics. There are no exams in the forenoon session.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia