அடுத்த கல்வியாண்டு முதல் ஆன்-லைனில் கர்நாடக பொது நுழைவுத் தேர்வு!!

Posted By:

சென்னை: அடுத்த கல்வியாண்டு முதல் கர்நாடக பொது நுழைவுத் தேர்வு(கேசிஇடி) ஆன்-லைனில் நடைபெறவுள்ளது.

கர்நாடகாவிலுள்ள பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்வி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கர்நாடக பொது நுழைவுத் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் பொது நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது.

இதை இனி அடுத்த கல்வியாண்டு முதல் ஆன்-லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல் ஆன்-லைனில் கர்நாடக பொது நுழைவுத் தேர்வு!!

2017-18 கல்வியாண்டில் இது நடைமுறைக்கு வருகிறது. இதற்கான முடிவை கர்நாடக தேர்வாணையம்(கேஇஏ) எடுத்துள்ளது.

ஆன்-லைனில் நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கேஇஏ செய்து வருகிறது. ஆவணங்களை சரிபார்க்கும் நிகழ்வுகளையும் ஆன்-லைன் மூலமாகவே செய்ய கேஇஏ முடிவு செய்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு kea.kar.nic.in என்ற இணையதளத்தைக் காணலாம். ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கேஇஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Karnataka Common Entrance Test (KCET) is said to go online from the next academic year 2017-18. KCET is an entrance examination conducted for admissions into under-graduate professional courses in Karnataka. Now, the Karnataka Examinations Authority (KEA) has decided to conduct the examinations online. According to sources, all procedures of KCET have been moved online, which also includes document verification. Thus, the KEA is now looking at conducting the examination online as well. The KEA has said, to contemplate the changes, the examination will be conducted both online and offline for the first year and then it shall moved online completely.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia