இன்று முதல் கர்நாடக பொது நுழைவுத் தேர்வு...!!

Posted By:

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உயர்கல்வியில் சேர்வதற்காக நடத்தப்படும் கர்நாடக மாநில பொது நுழைவுத் தேர்வு (சிஇடி) மே -ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

1,78,346 லட்சம் மாணவர்கல் இந்தத் தேர்வை எழுதவலுள்ளனர். இந்தத் தேர்வுக்காக கர்நாடக மாநிலம் முழுவதும் 391 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் கர்நாடக பொது நுழைவுத் தேர்வு...!!

பெங்களூரு நகரில் மட்டும் 82 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 42,963 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர்.

கன்னட மாணவர்களுக்கான கன்னட மொழி தேர்வு மே 6-ம் தேதி நடைபெறவுள்ளது. ஹொரநாடு, கடிநாடு கன்னட மாணவர்களுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படும். இதில் சுமார் 2,500 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், கையில் கடிகாரம் அணியக்கூடாது.

செல்போன், கால்குலேட்டர், வயர்லெஸ் கருவிகள் புத்தகம் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது.

தேர்வை அமைதியாக நடத்த 391 பார்வையாளர்கள், 782 சிறப்பு கண்காணிப்புப் படை, 11170 தேர்வுக் கூட பார்வையாளர்கள், 391 சிறப்பு அதிகாரிகள் உள்பட 19 ஆயிரம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு http://kea.kar.nic.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Karnataka Examinations Authority will be conducting the Karnataka Common Entrance Test (KCET 2016) on May 04, 2016 and May 05, 2016. About 1,78,346 candidates will be taking up the test tomorrow at 391 centres across the state of Karnataka. The State's Capital Bengaluru includes 82 centres in which about 42,963 students will be taking up the examination. Kannada language test for Horanadu and Gadinadu kannadiga candidates will be held on May 6, 2016. About 2560 candidates will be appearing for this exam in Bengaluru.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia