இனி ஆசிரியர் தம்பதிகள் ஒரே இடத்தில் பணியாற்றலாம்... தமிழகத்தில் அல்ல இந்த அறிவிப்பு, கர்நாடகத்தில்!

சென்னை: ஆசிரியர் தம்பதியினர் இனி ஒரே இடத்தில் பணிபுரிய வகைசெய்யும் சட்ட மசோதாவை கர்நாடக பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக சட்டப் பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர், கர்நாடக மாநில குடிமை சேவைகள் (ஆசிரியர்கள் இடமாற்றம் ஒழுங்குமுறை) (2-ஆம் திருத்தம்) சட்ட மசோதா 2015-ஐ தாக்கல் செய்தார்.

இனி ஆசிரியர் தம்பதிகள் ஒரே இடத்தில் பணியாற்றலாம்... தமிழகத்தில் அல்ல இந்த அறிவிப்பு, கர்நாடகத்தில்!

இந்த சட்ட மசோதா குறித்த விவாதத்தில் பல்வேறு எம்எல்ஏக்கள் கலந்துகொண்டு பேசினர். பின்னர் விவாதத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி பேசியது:

இந்த சட்ட மசோதாவை முழுமனதுடன் வரவேற்கிறேன். ஏற்கெனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்படுகிறது. இதன்மூலம், ஆசிரியர் தம்பதி இனி ஒரே இடத்தில் பணி செய்ய வழியேற்படும்.

ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கை இந்த சட்ட மசோதா மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல, பரஸ்பரம் ஆசிரியர் பணியிட மாற்றத்துக்கும் அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.

இதற்குப் பதிலளித்து அமைச்சர் கிம்மனே ரத்னாகர் பேசியது:

இந்த சட்டத் திருத்த மசோதா நிறைவேறியிருப்பதால், 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் கிடைக்கும். எனவே, இந்த சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி தர வேண்டும் என்று உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா நிறைவேற்றத்தால் ஆசிரியர்கள் தம்பதியினர் வெவ்வேறு இடங்களி்ல் பணியாற்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது. இதனாலல் கர்நாடகத்தில் உள்ள ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அதெல்லாம் சரி...இந்த சட்டம் எப்போங்க...தமிழகத்துக்கு வரும்...?

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Karnataka Legislative Assembly today passed a bill amending land revenue act as well as an amendment bill relating to transfer of teachers by voice vote. As Revenue Minister V Srinivas Prasad rose to table the bill and asked the House to consider it, Opposition BJP leader Jagadish Shettar objected to government bringing the bill on the last day of the session.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X