மத்திய அரசின் புதிய திட்டம்: இனி அரசு பள்ளி மாணவர்களும் இங்கிலிலீஷில் பேசலாம்!

Posted By:

சென்னை: 31 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு பயிற்சியை அளிக்கிறது "கரடி பாத்' என்கிற கல்வி நிறுவனம். இதன்மூலம் இனி அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் கலந்துரையாடும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் கான்வென்ட் பள்ளிக் குழந்தைகளைப் போல தங்களது குழந்தைகளும் இனி ஆங்கிலத்தில் பேசும் என்ற நம்பிக்கை ஏழை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய திட்டம்: இனி அரசு பள்ளி மாணவர்களும் இங்கிலிலீஷில் பேசலாம்!

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 90 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 31 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த ஆங்கிலம் பேச்சுப் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதற்காக "கரடி பாத்' கல்வி நிறுவனத்துடன் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மகிழ்ச்சியுடன் படித்தல் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான பயிற்சியை அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின்படி மூன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த பயிற்சி அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளதாக கரடி பாத் கல்வி நிறுவன இயக்குநர் சி.பி.விஸ்வநாத் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:

அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வீடுகளில் ஆங்கிலம் பேசும் வாய்ப்புகள் இருக்காது. எனவே, அவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு சிரமப்படுவர். இந்தப் பயிற்சியானது மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு முக்கியத்துவம் வழங்கும்.

வாரத்துக்கு மூன்று நாள்கள் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படும் என்றார் அவர்.

English summary
The Sarva Shiksha Abhiyan (SSA) on Tuesday signed a Memorandum of Understanding (MoU) with Karadi Path, an educational organisation, for a project to improve English proficiency among 31,000 first generation learners across 90 government primary schools in Kancheepuram and Tiruvallur districts over the next three years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia