வேலைவாய்ப்பை அள்ளித்தரும் எம்.ஆர்க்.. முதல் முறையாக கலசலிங்கம் பல்கலை.யில் அறிமுகம்!

Posted By:

சென்னை: மாநிலத்திலேயே முதல் முறையாக எம்.ஆர்க். பட்டமேற்படிப்பு வகுப்புகளை தொடங்கியுள்ளது கலசலிங்கம் பல்கலைக்கழகம். அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் இந்த எம்.ஆர்க் பட்ட மேல்படிப்பு மூலம் கிடைக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் எம்.ஆர்க் படிப்பை இந்த பல்கலைக்கழகத்தில் மட்டுமே இப்போது பயில முடியும் என்பது கூடுதல் சிறப்பு. விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலில் அமைந்துள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாநிலத்திலேயே முதல் முறையாக எம்.ஆர்க். (குடியிருப்பு கட்டுமான வடிவமைப்புப் பிரிவு) பட்டமேற்படிப்பை நடப்புக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பை அள்ளித்தரும் எம்.ஆர்க்.. முதல் முறையாக கலசலிங்கம் பல்கலை.யில் அறிமுகம்!

இதுதொடர்பாக இது குறித்து இப்பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் கூறியதாவது: நடப்புக் கல்வியாண்டில்(2015-16) புதிதாக முதுகலை எம்.ஆர்க். தொடங்குவது குறித்து, தொடர்பாக நாங்கள் விண்ணப்பம் செய்திருந்தோம். இதற்காக புதுதில்லியில் உள்ள கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் ஆய்வுக் குழு இங்கு கடந்த மே மாதம் வருகை புரிந்து ஆய்வுகளை நடத்தியது. பல்கலைக்கழகத்தின் அடிப்படை வசதிகளைப் பார்த்து அந்தக் குழு அறிக்கையை அளித்தது. இக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், எம்.ஆர்க். (குடியிருப்பு கட்டுமான வடிவமைப்புப் பிரிவு) தொடங்குவதற்கு கவுன்சில் ஆப் ஆர்க்டெக்சர் எங்கள் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த இரு ஆண்டு எம்.ஆர்க். பட்டமேற்படிப்பு அதிக வேலை வாய்ப்பு பெற்றுத் தரக்கூடியதாகும்.
தமிழகத்தில் கலசலிங்கம் பல்கலைக்கழத்தில் மட்டுமே முதன் முதலாக இந்த ஆண்டு (2015-16) இந்தப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, என்றார் அவர்.

English summary
kalasalingam university has introduced M.arch course in this academic year. Council of architecture has given permission to start this course in kalasalingam university.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia