சென்னை: கலாஷேத்ரா பவுண்டேஷனின் ருக்மிணி தேவி காலேஜ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் பரதநாட்டியப் பேராசிரியர் பணியிடங்கள் காத்திருக்கின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு அடுத்த ஒரு மாதத்துக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

பரதநாட்டியப் பேராசிரியர் பணியிடம் ஒன்று மட்டுமே காலியாகவுள்ளது. இந்தப் பணியில் சேர வயது 56-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை the Director, Kalakshetra Foundation, Tiruvanmiyur, Chennai 600 041 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
அடுத்த ஒரு மாதத்துக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும்.
சென்னை திருவான்மியூரில் 1936-ல் ருக்மிணிதேவி அருண் டேலால் இந்த கலாஷேத்ரா பவுண்டேஷன் தொடங்கப்பட்டது. பாரம்பரிய நாட்டியம், இசை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து கலையைக் காப்பாற்றி வருகிறது இந்த கலாஷேத்ரா பௌண்டேஷன். தற்போது கலாஷேத்ரா பெசன்ட் நகரிலுள்ள புதிய வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












