திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக கே. பிச்சுமணி பொறுப்பேற்றுள்ளார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த கி. பாஸ்கரின் பதவிக்காலம் கடந்த வெள்ளிக் கிழமையுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தராக கே. பிச்சுமணி சனிக்கிழமை பொறுப்பேற்றார். இவர், இப்பல்கலைக்கழகத்தின் 9-ஆவது துணைவேந்தர் ஆவார்.
இந்நிகழ்வின் போது, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பேராசிரியர் சுந்தரனார், திருவள்ளுவர் சிலைகளுக்கு புதிய துணைவேந்தர் கே. பிச்சுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கே. பிச்சுமணி துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பின்னர், முதல் பணியாக நாகர்கோவிலில் உள்ள அரசுக் கலைக் கல்லூரிக்கு மத்திய அரசின் "2எஃப்-12பி' அந்தஸ்து பெறுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
university education vice chancellor college tamilnadu tamilnadu government government jobs job alerts வேலை வாய்ப்பு அரசு வேலை தமிழக அரசு பல்கலைக் கழகம்
English summary
K Pitchumani appointed Manonmaniam Sundaranar University Vice Chancellor
Story first published: Monday, February 18, 2019, 11:11 [IST]


Click it and Unblock the Notifications












