இளநிலைப் பொறியாளர்களுக்கு மத்திய அரசுப் பணி!

Posted By:

சென்னை: மத்திய அரசு துறைகளில் இளநிலைப் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பொதுப்பணித்துறை, அஞ்சல் துறை, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவ பொறியியல் பணி , மத்திய நீர் ஆணையம் ஆகிய துறைகளில் இந்த இளநிலைப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்தியப் பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.

இளநிலைப் பொறியாளர்களுக்கு மத்திய அரசுப் பணி!

இதற்கான தேர்வு வரும் டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2015

பதவி: Junior Engineer Group 'B'
காலியிடங்கள் உள்ள துறைகள் விவரம்:
Central Public Work Department
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

Department of Posts
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

Military Engineering Service
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

Central Water Commission
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
இந்தத் துறைகளில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை பின்னர் அறிவுப்புச் செய்யப்படும். சம்மந்தப்பட்ட துறைகளில் பொறியியல் துறையில் பட்டம் அல்லது 3 வருட டிப்ளமோ முடித்திருந்தால் மட்டுமே இந்தப் பதவிக்குப் போட்டியிட முடியும்.
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 செலுத்தவேண்டும். இதனை இணையதளத்தில் பெறப்படும் இ-சலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும் அல்லது நெட்பேங்கிங் முறையிலும் செலுத்தலாம்.
http://ssconline.nic.in. http://ssconline2.gov.in என்ற இணையதளங்களில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைன் விண்ணப்பம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஆன்லைன் படிவத்தின் பகுதி I-ஐ ஆகஸ்ட் 7-ம் தேதி வரையிலும், பகுதி II படிவத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வரையிலும் நிரப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு அறியலாம்.

English summary
Junior Engineer posts are vacant in varous Central Government departments. For more details aspirants can logon into www.ssc.nic.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia