ஜார்க்கண்ட் மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி வேலை!!

Posted By:

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 16-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களை ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) நிரப்பவுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி வேலை!!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உணவுத் தொழில்நுட்பம், டெய்ரி டெக்னாலஜி, பயோ-டெக்னாலஜி, ஆயில் டெக்னாலஜி, வேளாண் அறிவியல், கால்நடை அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

கெமிஸ்ட்ரி பிரிவில் பட்டமேல்படிப்பு படித்திருந்தாலும் போதுமானது.

வயது 21 நிறைந்திருக்கவேண்டும். தகுதியுடையவர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படுபவர்கள் ஜேபிஎஸ்சி இணையதளத்தில் அறிவிக்கப்படுவர். கல்வித் தகுதி, வயதுச் சலுகை, .சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.jpsc.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Jharkhand Public Service Commission (JPSC) invited applications for 24 Food Safety Officer Post. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 16 February 2016. Notification details Notification No. : 01/2016 JPSC Vacancy Details Total Number of Posts: 24 Name of the Post: Food Safety Officer Eligibility Criteria for Food Safety Officer Post Educational Qualification: A Degree in Food Technology or Dairy Technology or Biotechnology or Oil Technology or Agriculture Science or Veterinary Sciences or Bio-Chemistry or Microbiology or Master Degree in Chemistry or Degree in Medicine from a Recognized University. Age Limit: 21 years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia