விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் அருமையான அப்ரண்டீஸ் பயிற்சி!

Posted By:

சென்னை: விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய விண்வெளித் துறையின் கீழ் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி). இந்த மையத்தில் தற்போது பட்டதாரிகளை 'அப்ரண்டிஸ்' பயிற்சிப் பணிக்காக விஎஸ்எஸ்சி தேர்வு செய்யவுள்ளனர்.

இந்த அப்ரண்டீஸ் பணிக்காக மொத்தம் 109 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் அருமையான அப்ரண்டீஸ் பயிற்சி!

இந்த அப்ரண்டீஸ் பணியிடங்களில் சேர விரும்புவோர் பெயரை பதிவு செய்து கொண்டு, நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம்.

ஏரோநாட்டிக்கல், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, புரொடக்சன், லைப்ரரி இன்பர்மேசன் சயின்ஸ் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளை படித்தவர்கள் இந்த அப்ரண்டீஸ் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

விண்ணப்பதாரர்கள் 1-11-2015 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரி பதிவு அட்டையை, நிரப்பி, கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் தேவையான சான்றுகளையும் இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ, நேரடியாகவோ the Board of Apprenticeship Training (Southern Region), Chennai என்ற முகவரிக்கு சமர்ப்பிக்கலாம். இதற்கான நேர்காணல் கேரள மாநிலத்தில் 17-10-15 மற்றும் 31-10-15-ம் தேதிகளில் நடைபெறும். விண்ணப்ப படிவத்தை http://www.sdcentre.org/ என்ற இணையப் பக்கத்துக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

English summary
Vikram Sarabhai Space Centre has annoounced Apprenctice jobs. Aspirants can log on into www.sdc-e-nt-re.org and get applications.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia