தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மானக் கழகத்தில் காத்திருக்கும் 2,175 பணியிடங்கள்!!

Posted By:

புதுடெல்லி: தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் 2175 பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மானக் கழகத்தில் காத்திருக்கும் 2,175 பணியிடங்கள்!!

தொழில்நுட்ப உதவியாளர், மின்னியல், தொழில்நுடப் உதவியாளர், இயந்தரவியல், உதவி வரைவாளர், களப்பணி உதவியாளர்(பயிற்சி), சோதகர் வேதியர், இளநிலை உதவியாளர், நிர்வாகம், இளநிலை உதவியாளர் கணக்கு, இளநிலை தணிக்கையாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படும்.

இதற்கான எழுத்துத் தேர்வுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து 02.03.2016 முதல் 16.03.2016 வரை இணைய வழிமூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும், ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலையிழந்த பணியாளர்களும், முன்னாள் இராணுவ வீரர்களும், பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சி (ஐடிஐ) பெற்று முந்தைய தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் முடித்தவர்கள் கீழ்வரும் பணியிடங்களுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

பொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், கைவினைஞர் சான்று வரைவாளர் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, வேதியியல் துறையில் பி.ஏ., பி,எஸ்சி, பி.காம், மின்னியல், கம்பியாளர் பிரிவில் ஐடிஐ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினரும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.250, அனைத்து பிரிவினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு - ரூ. 250 வசூலிக்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 16 ஆகும். தேர்வு கட்டணத்தைச் செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 18 ஆகும்.

ஏப்ரல், மே மாதங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுத் தேதிகள் பின்னர் www.tangedco.directrecuitment.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

கூடுதலான விவரங்களைப் பெற www.tangedco.directrecuitment.in என்ற இணையதளத்தைக் காணலாம்.

English summary
TNEB has inviterd applications for the post of techincal assistant etc., For more details aspirants can logon into www.tangedco.directrecuitment.in. March 16 is the last date to apply for the post.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia