பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 'டிரெய்னி கோடர்' பணி

Posted By:

சென்னை: டிரெய்னி கோடர் பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் இதற்கான நேர்முகத் தேர்வை நடத்துகிறது.

இதுதொடர்பாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 'டிரெய்னி கோடர்' பணி

பல்கலைக்கழகம் நடத்தும் இந்த நேர்முகத் தேர்வில் 2012, 13, 14, 15-ம் ஆண்டுகளில் அறிவியல் பின்புலம் சார்ந்த இளநிலை, முதுநிலை பட்டம், பட்டயம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கான ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சமாக இருக்கும். தேர்வு செய்யப்படுவோர் சென்னையிலுள்ள ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவர்.

வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து, குறித்த நேரத்தில் தகுந்த தரத்துடன் அறிக்கை தயாரித்து அளிப்பதோடு, தகுந்த தகவல் தொடர்பாற்றலுடைய தகுதி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

விருப்பம் உடையவர்கள் தங்களது சுய விவரங்களை ஒரு பக்க அளவில் தயார் செய்து, இம்மாதம் 15-ம் தேதிக்குள் ptc@bdu.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வுக்கான விவரங்கள் பிறகு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Trichy Bharthidasan University has invited applications for the post of Trainee Coder Posts. Aspirants can send their resumes to ptcbdu.ac.in
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia