ஒரு லட்சம் பேருக்கு வேலை அளிக்கப் போகும் டி.சி.எஸ்!

Posted By:

சென்னை: டேட்டா பேஸ் பிரிவில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை விரைவில் அளிக்கவுள்ளது டி.சி.எஸ். நிறுவனம்

இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் சென்னைப் பிரிவு செயலாக்கத்தின் தலைவர் ரவி விஸ்வநாதன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நிறைவுற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் "முதலீட்டு வாய்ப்புகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஒரு லட்சம் பேருக்கு வேலை அளிக்கப் போகும் டி.சி.எஸ்!

இதில், ரவி விஸ்வநாதன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு குறித்து பேசியதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறையில் தரவுகளைச் சேகரிக்கும் ('டேட்டாபேஸ்) நிபுணர்களின் தேவை அதிகளவில் உள்ளது. தமிழகத்தில் டி.சி.எஸ். நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் தரவு நிபுணர்களுக்கு வேலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார்.

English summary
Job recruitment will begin shortly in TCS, Company Chennai Division president(Execution) Mr. Ravi Viswanthan said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia