ஓமனில் வேலை... சென்னையில் இன்டர்வியூ!

Posted By:

சென்னை: ஓமன் நாட்டில் இயந்திரம் இயக்குபவர்களுக்கான இன்டர்வியூ சென்னையில் இன்று (செப்.4) நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஓமனில் வேலை... சென்னையில் இன்டர்வியூ!

ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்துக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 2 ஆண்டு பணி அனுபவம் உள்ள, 22 முதல் 32 வயதுக்குள்பட்ட இயந்திரம் இயக்குபவர்களுக்கான நேர்முகத் தேர்வு செப்.4-ம் தேதி நடைபெற உள்ளது.

இதில்,தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தகுதி, அனுபவத்துக்கேற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம், ஓமன் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப சலுகைகள் வழங்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உடையோர் அசல் பாஸ்போர்ட், கல்வி, அனுபவம் உள்ளிட்டவையின் நகல், நீலநிற புகைப்படத்துடன் கூடிய 5 புகைப்படங்களை கிண்டி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நேரில் அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு, 044-22502267, 22505886, 08220634389 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
job opportunities has been created in Oman country. aspirants can go for the interview which is going on today in Chennai. Interested persons can contact in this phone numbers 044-22502267, 22505886, 08220634389.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia