கல்பாக்கம் அணு மின் ஆராய்ச்சி மையத்தில் 42 டெக்னீஷியன் பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் டெக்னீஷியன் பணியிடங்கள் காத்திருக்கின்றன.

கல்பாக்கத்தில் அமைந்துள்ளது அணு மின் ஆராய்ச்சி நிலையம். இந்த நிலையம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை இந்திராகாந்தி அணு மின் ஆராய்ச்சி மையம் செய்து வருகிறது. இந்த மையத்தில் தற்போது 42 டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய 50 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அறிவியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட டிரேடில் 2 வருட ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

மேலும் இந்தப் பணியிடம் தொடர்பான முழுமையான விவரங்களை அறிய http://www.igcar.ernet.in என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

English summary
Kalpakkam Indira Gandhi centre for atomic research has invited applications for the post of technicians. For more details aspirants can logon into http://www.igcar.ernet.in
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia