டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தில் எக்கச்சக்க வேலைவாய்ப்புகள்!

Posted By:

சென்னை: டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தில் வேலைவாய்ப்புகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளளாம்.

மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசுடன் இணைந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் இந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. 4 வருட ஒப்பந்த அடிப்படையில் டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பணிபுரிய உதவி மேலாளர், ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தில் எக்கச்சக்க வேலைவாய்ப்புகள்!

மொத்தம் 31 உதவி மேலாளர்(சிவில்) பணியிடங்கள் காலியாகவுள்ளன. சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500 என்ற அடிப்படையில் இருக்கும். 01.07.2015 தேதியின்படி வயதுவரம்பு 28க்குள் இருக்க வேண்டும்.

60 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ முடித்து 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கேட்(GATE) தேர்வில் போதிய மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதேபோல ஜூனியர் என்ஜினீயர்(சிவில்) பணியிடங்கள் 100 காத்திருக்கின்றன. சம்பளம் மாதம் ரூ.13,500 - 25,520 என்ற அடிப்படையில் இருக்கும். 01.07.2015 தேதியின்படி வயது 28க்குள் இருக்க வேண்டும். பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

எழுத்துத் தேர்வு, கலைந்துரையாடல், நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வின் மூலம் தகுதியான நபர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.150 மட்டுமே வசூலிக்கப்படும்.

இதற்கான செலானை பதிவிறக்கம் செய்து DMRC Account No: 33700092265- என்ற எண்ணில் செலுத்த வேண்டும்.

செலான் பதிவிறக்கம் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 20 ஆகும். www.delhimetrorail.com என்ற இணையதளத்துக்குச் சென்றறு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான செப்டம்பர் 23 கடைசி தேதியாகும். செலான் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி செப்டம்பர் 23 ஆகும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.delhimetrorail.com என்ற இணையதளத்தில் அறியலாம்.


English summary
job opportunities has been created in Delhi Metro Rail Corporation. More than 130 jobs has been vacant. For More details aspirants can logon into www.delhimetrorail.com

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia