விழுப்புரத்தில் தகவல் பகுப்பாளர் பணி... ஒரு வாரத்துக்குள்ள அப்ளை பண்ணுங்க!

Posted By:

சென்னை: விழுப்புரத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தகவல் பகுப்பாளர் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் பகுப்பாளர் பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எம்.லக்ஷ்மி வெளியிட்ட அறிக்கை:

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு தகவல் பகுப்பாளர் பணியிடம் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விழுப்புரத்தில் தகவல் பகுப்பாளர் பணி... ஒரு வாரத்துக்குள்ள அப்ளை பண்ணுங்க!

ஆனால் இங்கு ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது. மாத தொகுப்பூதியமாக ரூ.14 ஆயிரம் வழங்கப்படும். பி.ஏ, பி.சி.ஏ, பி.எஸ்.ஸி புள்ளியியல், பி.எஸ்.ஸி கணக்கு பாடங்கள் பயின்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இவர்கள் பத்தாம் வகுப்பு, 12 வகுப்பும் பயின்று பின்னர் பட்டம் பெற்றவராக இருத்தல் அவசியம்.

கூடுதலாக ஏதாவது ஒரு நிறுவனத்தில் தகவல் பகுப்பாளராக இரண்டாண்டு அனுபவம் இருக்க வேண்டும். இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் நபரின் வயது 40 மற்றும் அதற்குள் இருத்தல் நலம்.

மேற்கண்ட பதவிக்கான தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் அடுத்த 10 தினங்களுக்குள் மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.156, சாரதாம்பாள் தெரு, நித்தியானந்தா நகர், வழுதரெட்டி, விழுப்புரம்-605401 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 04146-258099 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Villupuram District Collector`s office has invited applications from suitable persons for the post in district child security section.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia