சிட்கோவில் காத்திருக்கிறது ஃபயர்மேன் வேலை!

Posted By:

சென்னை: நகர் மற்றும் தொழில் மேம்பாட்டுக் கழகத்தில்(சிட்கோ- CIDCO) ஏராளமான பணியிடங்கள் காத்திருக்கின்றன.

இந்தக் கழகத்தில் தற்போது 84 ஃபயர்மேன்(Fireman) மற்றும் டிரைவர் ஆப்பரேட்டர்(Driver Operator) பணியிடங்களை கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது சிட்கோ.

சிட்கோவில் காத்திருக்கிறது ஃபயர்மேன் வேலை!

மகாராஷ்டிர மாநில அரசல் நடத்தப்படும் அமைப்பு சிட்கோ என்பது குறிப்பிடத்தக்கது. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. ஃபயர்மேன்(Fireman) - 78 பணியிடங்கள்: இந்தப் பணியிடத்துக்கு மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2000 ஊதியம் வழங்கப்படும்.

2. டிரைவர் ஆப்பரேட்டர்(Driver Operator) - 6 பணியிடங்கள்: இந்தப் பணியிடத்துக்கு மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400 ஊதியம் வழங்கப்படும்.

பணியிடங்களில் சேர நினைப்போருக்கு வயதுவரம்பு 33க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தவேண்டும். SC, ST, VJNT மற்றும் SBC, OBC பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படும். எழுத்துத் தேர்வு, திறமை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தப் பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வரும் ஜூன் 30 கடைசி தேதியாகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததற்கான கணினி பிரதி சென்று சேர ஜூலை 15-ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் உத்தேசமாக ஆன்லைன் தேர்வு 17.07.2015 முதல் 02.08.2015 வரையிலான ஒரு தேதியில் நடைபெறும் என சிட்கோ அறிவித்துள்ளது.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cidco.maharashtra.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு அறியலாம்.

English summary
Recruitment of Fireman & Driver Operator in CIDCO will be held coming july. Applicants who can apply for the posts by june 30.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia