கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சியாளராக பணிபுரிய விருப்பமா?

Posted By:

சென்னை: கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சியாளர் பணியிட(ஸ்டைபண்டியரி டிரைனி) வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் Stipendiary Trainee (Technician/B) - Group (C) 42 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சியாளராக பணிபுரிய விருப்பமா?

இந்தப் பணியிடங்களில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கல்பாக்கம் அணு சக்தி ஆராய்ச்சி நிலையம் வரவேற்கிறது.

எழுத்துத் தேர்வு, நேரடித் தேர்வு முறையில் இந்தப் பணியிடங்களுக்கு நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆகஸ்ட் 20-ம் தேதி விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். மேலும் விவரங்களைப் பெற http://www.npcil.nic.in என்ற இணையதளத்தைக் காணலாம்.

English summary
Madras Atomic Power Station (MAPS) located at Kalpakkam about 80 kilometres south of Chennai, India, is inviting applications for the post of Stipendiary Trainee (Technician/B) - Group (C). The eligible candidates send their application before 20-08-2015

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia