குவைத்தில் வேலை வேண்டுமா...! தமிழக அரசு ஏற்பாடு...!!

Posted By:

சென்னை: குவைத்தில் பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து தரவுள்ளது.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதற்காக தமிழக அரசு ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பொரேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

குவைத்தில் வேலை வேண்டுமா...! தமிழக அரசு ஏற்பாடு...!!

குவைத்தில் தொழிலாளர், ஹெவி டியூட்டி டிரைவர், ஆட்டோகேட் ஆப்பரேட்டர், என்ஜினீயர், சிவில் சூப்பர்வைஸர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக தற்போது விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்தப் பணியிடங்கலு்ககு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் புகைப்படத்துடன் கூடிய தன்விவரக் குறிப்பு, அட்டெஸ்ட் செய்யப்பட்ட தகுதி சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் போன்றவற்றை omcresum@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் மே 27-க்குள் வந்து சேரவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

English summary
Tamilnadu Government agensy "Overseas Manpower Corporation Limited" has invited applications for various posts in Kuwait. For more details aspirants can logon into www.omcmanpower.com

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia