கொல்கத்தா துறைமுகத்தில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

Posted By:

டெல்லி: கொல்கத்தா துறைமுகத்தில் ஏராளமான பணியிடங்கள் காத்திருக்கின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று கொல்கத்தா துறைமுக நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.

கொல்கத்தா துறைமுகத்தில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

இங்கு 272 மேற்பார்வையாளர்கள் மற்றும் இதர பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஜெனரல் எக்யூப்மெண்ட் ஆப்பரேட்டர் பணியிடங்களுக்கு 258 பேரும், இதர பணியிடங்களுக்கு 14 பேரும் தேர்வு செய்யப்படவுள்ளன.

ஜெனரல் எக்யூப்மெண்ட் ஆப்பரேட்டர் பணியிடங்களுக்கு ரூ.17,900 சம்பளமாக வழங்கப்படும். எஞ்சியுள்ள 14 பணியிடங்களுக்கு (சூப்பர்வைசர்) ரூ.24 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்களில் சேர வயதுவரம்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர விரும்புபவர்களின் வயது 01.02.106 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.kolkataporttrust.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை "In the office of Sr. Dy. Manager (P&IR), Haldia Dock Complex, Jawahar Tower Building, Haldia Township, Purba Medinipur, PIN - 721 607" என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 15-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kolkataporttrust.gov.in/showfile.php?layout=1&lang=1&level=1&sublinkid=1932&lid=1641 என்ற லிங்க்கை கிளிக் செய்யலாம்.

English summary
Kolkatta port trust has invited application for the post of General Equipment Operator, Supervisors. Aspirants can sen the applications by post. For more details aspirants can logon into http://www.kolkataporttrust.gov.in/showfile.php?layout=1&lang=1&level=1&sublinkid=1932&lid=1641

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia