கான்பூர் ஐஐடி-யில் எஞ்ஜினீயர்களுக்கு வேலை இருக்கு!

Posted By:

சென்னை: உயர்கல்வியை தரம் குறையாமல் வழங்கி வரும் ஐஐடிகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஐஐடி-யில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

கான்பூரிலுள்ள ஐஐடியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 68 இளநிலை பொறியாளர், இளநிலை டெக்னீசியன், இளநிலை உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன. மொத்தம் 68 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தப் பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கான்பூர் ஐஐடி-யில் எஞ்ஜினீயர்களுக்கு வேலை இருக்கு!

விளம்பர எண்: 1/2015

மொத்த காலியிடங்கள்: 68

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதிவாளர், சுகாதார மையத் தலைவர், எக்சிகியூட்டிவ் என்ஜினீயர்கள், மருத்துவ அதிகாரிகள்,

உதவி பதிவாளர்கள், மாணவர் ஆலோசகர், முதல்வர், உதவி பொறியாளர்கள், தொழில்நுட்ப கண்காணிப்பாளர்கள், உதவி பாதுகாப்பு அதிகாரி, இளநிலை என்ஜினீயர்கள், ஜூனியர் டெக்னிக்கல் சூப்பிரடெண்ட், ஜூனியர் சூப்பிரடெண்ட், சீனியர் லைப்ரரி இன்பர்மேஷன் அசிஸ்டெண்ட், பிசியோதெரபிஸ்ட், ஜூனியர் அசிஸ்டண்ட், ஜூனியர் அசிஸ்டண்ட்(லைப்ரரி), ஜூனியர் டெக்னீஷியன் ஆகிய பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.iitk.ac.in என்ற கான்பூர் ஐஐடி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Assistant Registrar, Recruitment Section, Room No. 224, 2nd Floor (Faculty Building), IIT KANPUR-208 016 (U.P.) INDIA என்ற முகவரிக்கு தபால் அனுப்பவேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி 07.07.2015 ஆகும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iitk.ac.in/infocell/recruitment/Advt_No_1_2015/Advt-No-1-2015.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு விவரங்கள் அறியலாம்.

English summary
IIT Kanpur has invited applications from suitable persons for various posts like Junior Engineers. Applicats who can see the official site of Kanpur IIT for additional information. The Institute is in search of suitable Indian Nationals for appointment of various posts.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia