இளம் பொறியாளர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!!

Posted By:

சென்னை: பொறியாளர் படிப்பு படித்து முடித்துள்ள இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி அறிவிப்புகளை வெளியிட்டுள்ள ரயில்வே.

புதிய பணியிடங்களுக்காக ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வேயி்ல் ஏற்பட்டுள்ள காலியிடங்கள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளில் ஆட்களை அமர்த்தும் பணியில் ரயில்வே பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது.

 இளம் பொறியாளர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!!

தற்போது 2235 முதுநிலை மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 26-ம் தேதி கடைசி நாளாகும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்தப் பணியிடம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு http://chennai.rrbonlinereg.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு காணலாம்.

English summary
Railway Recruitment Board (RRB) invited online applicaitons from the eligible aspirants for vacancies of Junior Engineer, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant, Senior Section Engineer and Chief Depot Material Superintendent. Applications complete in all the aspects should submit only online to the Railway Recruitment Board (RRB) untill 23:59 hours of closing date 27th July 2015

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia