கடற்படையில் பணியாற்ற வேண்டுமா? காத்திருக்கிறது ஸ்டோர்கீப்பர் பணி!

Posted By:

சென்னை: இந்தியக் கடற்படையில் பணியாற்ற அரியதொரு வாய்ப்பு இளைஞர்களுக்குக் கிடைத்துள்ளது.

இந்திய கிழக்கு கடற்படையின் தலைமையகத்தில்(ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம்) நிரப்பப்பட உள்ள 219 கண்காணிப்பாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் பணியிடங்களுக்காக தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடற்படையில் பணியாற்ற வேண்டுமா? காத்திருக்கிறது ஸ்டோர்கீப்பர் பணி!

ஸ்டோர் கீப்பர் பிரிவில் 184 பணியிடங்களும், கண்காணிப்பாளர் பிரிவில் 35 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

ஸ்டோர் கீப்பர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருத்தல் நலம். கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 31.08.2015 தேதியின்படி 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டியது அவசியம்.

மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை

THE MATERIAL SUPERINTENDENT (FOR UNIT RECRUITMENT OFFICER), MATERIAL ORGANISATION, KANCHARAPALEM POST, 9 IRSD AREA (NAU SHAKTI NAGAR), VISAKHAPATNAM - 530008, ANDHRAPRADESH என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சென்று சேருமாறு அனுப்பவேண்டும்.

இந்தப் பணியிடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்கள், திட்டங்கள், வயதுவரம்பு சலுகை போன்றவற்றுக்கு http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_187_1516b.pdf என்ற இணையதள லிங்கை தொடர்புகொண்டு அறியலாம்.

English summary
Eastern Naval Command has to recruit 184 storekeepers, 35 superintendent posts shortly. For more details logon to http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_187_1516b.pdf.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia