எல்லையோர பாதுகாப்புப் படையில் வேலை பார்க்க ஆசையா....!!

Posted By:

டெல்லி : பி.எஸ்.எஃப். என அழைக்கப்படும் எல்லையோரப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 622 உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். இந்த வேலைக்கு ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எல்லையோர பாதுகாப்புப் படையில் வேலை பார்க்க ஆசையா....!!

அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் (ஆர்.எம்.) பணியிடங்கள் 152-ம், ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்கள் 470-ம் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது 15.07.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உரிய பிரிவினருக்கு அளிக்கப்படும்.

மெட்ரிக் தேர்ச்சியுடன், ரேடியோ மற்றும் டிவி தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இரண்டு கட்ட எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விருப்பம் உள்ளவர்கள் rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் ஜூன் 16 முதல் ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்கள் அறிய rectt.bsf.gov.in என்ற இணையதளத்தை மாணவர்கள் பார்க்கலாம்.

English summary
Border Security Force has invited applications for the posts of assistant sub-inspector, Head constable. For more details aspirants can logon into rectt.bsf.gov.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia