10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு!

Posted By:

சென்னை: மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு இளைஞர்களுக்குக் கிடைத்துள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் இஞ்சின் தொழிற்சாலையில் பல்வேறு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 61 குரூப் 'சி' பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு!

மொத்தம் 61 இடங்கள் கலியாகவுள்ளன. தேர்ந்தெடுக்கப்படுவோர் சென்னையிலேயே பணியாற்ற அனுமதிக்கப்படுவர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆவடி எஞ்சின் தொழிற்சாலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.efa.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து The General Manager, Engine Factory, Avadi, Chennai - 54 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் அவசியம்.

தற்போது விண்ணப்பங்களை ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் தேதி தொடங்கிவிட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பின்னர் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி ஜூலை மாதம் 20-ம் தேதியாகும்.

மேலும் இந்தப் பணியிடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய, http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10201_406_1516b.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு காணலாம்.

English summary
Applications are invited from Indian Nationals to fill up 51 vacancies in Industrial Establishment (Group C) and 10 vacancies in Non-Industrial Establishment (Group C) at Engine Factory Avadi, Chennai - 54. The candidates shall apply for the posts through online only.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia