அலகாபாத் வங்கியில் பணியாற்றப் போகலாம்...வாங்க....!!

சென்னை: அலகாபாத் வங்கியில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான அலகாபாத் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அலகாபாத் வங்கியில் பணியாற்றப் போகலாம்...வாங்க....!!

 

மொத்தம் 50 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த வேலையில் சேர்வதற்கு சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது CFA, ICWA, PGDBM, MBA (Finance) உள்ளிட்ட படிப்புகளில் ஏதாவது ஒரு படிப்பை முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளமாக மாதம் ரூ.31,705 - 45,950 என்ற அளவில் வழங்கப்படும்.

செக்யூரிட்டி அதிகாரி, சிவில் என்ஜினீயர், எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்களும் இங்கு காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களில் சேர வயதுவரம்பு: 20 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100 கட்டண் பெறப்படும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பங்களை www.allahabadbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி மே 30 ஆகும். மேலும் கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்கள் அறிய www.allahabadbank.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Allahabad bank has invited applications from the aspirants for various posts. Aspirants can logon into www.allahabadbank.in for more details.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X