ஐடிஐ மாணவர்களே...தயாரா...! ஒரகடம் ராயல் என்பீல்ட் நிறுவனத்தில் வேலை!!

Posted By:

சென்னை: சென்னையை அடுத்த ஒரகடத்திலுள்ள ராயல் என்பீல்ட் நிறுவனத்தில் ஐடிஐ மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

இதற்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 6-ம் தேதி ஒரகடத்தில் நடைபெறவுள்ளது.

ஐடிஐ மாணவர்களே...தயாரா...! ஒரகடம் ராயல் என்பீல்ட் நிறுவனத்தில் வேலை!!

ஐடிஐ முடித்த மாணவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ராயல் என்பீல்ட் பைக் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். சமீப காலமாக என்பீல்ட் பைக்கை வாங்குவதில் இளைஞர்கள் முதல் பெரியோர் வரை ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ராயல் என்பீல்ட் பைக் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஒரகடத்திலுள்ள ராயல் என்பீல்ட் பைக் தொழிற்சாலைக்கு ஐடிஐ மாணவர்களை வேலைக்கு எடுக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரிகளை 8939696890 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

English summary
Royal Enfield, oragadam has invited applications from ITI students for the jobs in Oragadam Plant. Students who have interest in this job they can ready for the interview which will be held in Chennai on Feb 6.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia